மிட்டாய் கவிதைகள்!

எதிர்ப்பை எதிர்பார்க்காமல்!

March 30, 2014

will you marry me 00446211

வெண்மேக வானம்
செங்கதிரால் சூழ்ந்திருக்க,

இமையிரண்டும் படமெடுக்க
இருக்குமிடம் மறந்துபோக,

அலைகூந்தல் தொடும்போது
ஐம்புலனும் அறிவிழக்க,

வாய்மட்டும் தப்பிவந்து
சொல்லுதே ஒருகாதல்!

எதிர்ப்பை எதிர்பார்க்காமல்
ஏக்கத்தோடு பதிலுக்காக!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்